Map Graph

ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்

கச்சாலீசுவரர் கோவில் என்னும் மாபெரும் கச்சாலி பகோடா தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன், ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். கி.பி. 1725 ஆம் ஆண்டில் ஆர்மீனியன் தெருவில் உள்ள துபாஷ் கலவை செட்டிக்குச் சொந்தமான இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அன்றைய மதராஸ் நகரில் இடது கை மற்றும் வலது கை சாதிப்பிரிவுகளும் இடம் பெற்றிருந்தன. இப்பிரிவுகளுக்கிடையே பல மோதல்களும் நிகழ்ந்தன. முதன்முதலில் இங்குதான் இப்பிரிவுகளுக்கிடையேயான மோதல் நிகழ்ந்தது.

Read article
படிமம்:Front_view_of_Kacchaaleeshwarar_Koil,_Chennai.jpgபடிமம்:Facade_of_Kacchaaleeshwarar_Koil,_Chennai.jpgபடிமம்:Pillaiyar_Thoppu_at_Kachchaaleeshwar_Koil,_Chennai.jpgபடிமம்:TempleTank_KachchaaleshwararKoil_Chennai.jpg